செயற்கை மரத்தின் மூலம் கோவை வ.உ.சி பூங்காவிற்கும் வருகிறது இலவச வைஃபை வசதி

கோவை: கோவை ரயில் நிலையம் மற்றும் ரேஸ் கோர்ஸ் பகுதிகளைத் தொடர்ந்து, வ.உ.சி பூங்காவிலும் இலவச வைஃபை வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.


கோவை: கோவை ரயில் நிலையம் மற்றும் ரேஸ் கோர்ஸ் பகுதிகளைத் தொடர்ந்து,  செயற்கை மரத்தின் மூலம் வ.உ.சி பூங்காவிலும் இலவச வைஃபை வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுமார் 25 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் பெஞ்சு'கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஸ்மார்ட் பெஞ்சு அமைக்கப்பட்டது. இதில், இலவச வைஃபை வசதி, சூரிய மின்சக்தி மூலம் மின் இயந்திரங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டன.



மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், ஊழியர்களும் இந்த வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், நகரின் முக்கிய பகுதிகளில் மரங்கள் வடிவிலான 'ஸ்மார்ட் பெஞ்சு'கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இதனையடுத்து, வ.உ.சி மைதானத்தில் ரூ. 12 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் ட்ரீ' எனும் செயற்கை மரம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில், சுமார் 30 பேர் அமரும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தில், இலவச வைஃபை மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, மின் இயந்திரங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உருவாக்கப்படுகின்றன.



'ஸ்மார் ட்ரீ' பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் பொறியாளர் கூறியதாவது :- 600 சதுர அடி பரப்பளவில் 30 பேர் அமரும் வகையில் இந்த செயற்கை மரம் உருவாக்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் பணிபுரியும் கலை இயக்குநர்களிடம் ஆலோசனை பெற்று உண்மையான மரத்தைப் போலவே 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கிளைகள் மற்றும் இலைகள் அனைத்தும் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மழை மற்றும் காற்றைத் தாங்கி நிற்கும் வகையில் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார். 

பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் தங்க நிற வண்ணத்தில் இந்த செயற்கை மரத்தின் இலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இதன் அருகே நின்று இப்போதே செல்ஃபி எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

'ஸ்மார்ட் ட்ரீ' திட்டம் குறித்து கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின், திட்ட மேலாளர் சுபாஷ் கூறுகையில், "செயற்கை மரங்கள் வடிவிலான நவீன வசதிகள் உடைய 25 ஸ்மார்ட் பெஞ்சுகள் நகரின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன. இலவச வைஃபை மற்றும் மின் இணைப்பு வசதிகளோடு கலைநயமிக்க வடிவில் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொள்கிறது. இதில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தின் ஒருபகுதி மாநகராட்சிக்கு வழங்கப்படும்.

கட்டுமான தரம் குறித்த ஆய்விற்குப் பிறகு அடுத்த மாதத்தில் வ.உ.சி., மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் முதல் 'ஸ்மார்ட் ட்ரீ' பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் அமைக்கப்படும்," என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...