திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரிலிந்து கொண்டு வரப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவாய் துறையினரால் பெறப்பட்டது.

அந்த இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, 5,880 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,200 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி முன்னிலையிலும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையிலும், வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.