பல்லடம் அருகே குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக கிடந்த பெண்

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் உட்பட மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் உட்பட மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பல்லடம் அருகே உள்ள ஆர்.எம்.நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. பொன்னுசாமி தினமும் கிணற்றில் மோட்டர் போடுவது வழக்கம் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால், நேற்று மாலை கிணற்றில் மோட்டர் போடுவதற்காக பொன்னுசாமி சென்றார்.

அப்போது, கிணற்றில் துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து கிணற்றினுள் பார்த்த போது அதனுள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் மிதந்துள்ளன. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அழுகிய நிலையில் மிதந்த மூன்று உடல்களையும் மீட்டனர். அந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என்றும், குழந்தைகளுக்கு 12 மற்றும் 8 வயது இருக்கும் என்றும் தெரிவித்த போலீசார் அவர்கள் யார்? கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இரண்டு குழந்தைகளுடன் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...