தொடர்மழையால் கூடலூர் சாலையில் விழுந்த மரங்கள் : வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்திய நிகழ்வு

நீலகிரி : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

நீலகிரி : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த மழையினால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்களும் சாலைகளில்  விழுந்து விபத்து ஏற்படுகிறது. 

இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள ஆமைகுளம் பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  அங்கு பெய்த தொடர் மழையால் சாலையில் சில மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அப்புறப்படுத்த மீட்புக் குழுவினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள் அதிகாரிகளின் உதவியை எதிர்பாராமல், அவர்களே சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மழைகாலங்களில் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து வரும் நிலையில், மீட்புக் குழுவினரின் இந்த அலட்சிய நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...