ஸ்டாலினுக்கு பா.ஜ.க., ரிவேஞ் : டுவிட்டரில் டிரெண்டான #GobackStalin

தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ள நிலையில், மோடியின் ஆதரவாளர்களால் #GobackStalin என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் இன்று டிரெண்டாகியுள்ளது.

தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ள நிலையில், மோடியின் ஆதரவாளர்களால் #GobackStalin என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் இன்று டிரெண்டாகியுள்ளது. 



பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த போது, தி.மு.க.,வினர், கருப்புக் கொடி காட்டியும், 'கோ பேக் மோடி' (Go back Modi) என கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், #gobackmodi என்ற ஹேஸ்டேகின் மூலம் சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாக்கினர். இதேபோல, பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷாவின் வருகையின் போதும் இதே போன்ற எதிர்ப்பை தி.மு.க.,வினர் வெளிப்படுத்தினர். 



இந்த நிலையில், லண்டன் சென்றுள்ள தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை திரும்ப இருந்த நிலையில், பா.ஜ.க., ஆதரவாளர்கள் #GobackStalin என்ற ஹேஸ்டேக்கை அதிகளவு பரப்பி வருகின்றனர். தமிழகம் அளவில் இந்த ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகிய நிலையில், தி.மு.க., ஆதரவாளர்கள் #welcomestalin என்ற ஹேஸ்டேக்கை பரப்பத் தொடங்கியுள்ளனர். இதனால், டுவிட்டரில், தி.மு.க., பா.ஜ.க., இடையிலான டுவிட்டர் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. 



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...