சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்டவற்றிற்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய நிலையிலும், விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதையடுத்து, இந்திய மருத்துவமுறை படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தமிழகத்தை வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்துறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006-ன் பிரிவுகளுக்கு முரணாக நீட் தேர்வை இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.