கோவை : மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மார்புகளை இழந்த பெண்களுக்கு, இயற்கையான முறையில் மார்பகங்களை உருவாக்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களுக்கு உள்ள புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு மார்பக புற்றுநோயாகும். ஒவ்வொரு நாளும் மார்பக புற்றுநோய் அதிரித்துக் கொண்டு வருகிறது. ஏனெனில், தற்போது உள்ள நவீன வாழ்க்கை நடைமுறையில் இளம் பெண்களும் மார்பக புற்றுநோயினால் பாதிப்படைகின்றனர். 25 வருடங்களுக்கு முன்பு 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் இந்த மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது 30 மற்றும் 40 வயதுடைய பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மார்புகளை இழந்த பெண்களுக்கு, இயற்கையான முறையில் மார்பகங்களை உருவாக்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை கங்கா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மார்பகப் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் எச் ராஜ சபாபதி மற்றும் டாக்டா் ராஜா சண்முகம் கிருஷ்ணன் ஆகியோர் கலந்த கொண்டு பேசினர்.
மருத்துவர் டாக்டா் ராஜா சண்முகம் கிருஷ்ணன் கூறுகையில், "நோயாளியின் மார்பக புற்றுநோயின் அளவைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மார்பகத்தை அகற்றுவது குறித்து நோயாளிகளுடன் கலந்தாலோசிக்கப்படும். மார்பக மறுசீரமைப்பு சிலிக்கான் பொருத்தியும் அல்லது நோயாளிகளின் சதையை வைத்தே செய்ய முடியும். ஆனால், நோயாளிகளின் கதையை வைத்து மார்பக மறுசீரமைப்பு செய்வதுதான் சிறந்தது. அடி வயிற்றில் தோல், சதை மற்றும் இரத்த நாளங்கள் எடுப்பதினால் தழும்புகள் சேலை கட்டுவதன் மூலம் வெளியில் தெரியாமல் இருப்பதுடன், நவீன மைக்ரோ அறுவை சிகிச்சைகள் மூலம் எடுத்த தோல், தசை மற்றும் இரத்த நாளங்கள் மார்பில் இணைப்பதால், மார்பகத்தில் தழும்புகள் இல்லாமல், இயற்கையான மார்பகம் இருப்பதை உணர முடியும்," என்றார்.

பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு பற்றிய சந்தேகங்களுக்குக் கங்கா மார்பாக புற்றுநோய் மையம் வாட்ஸ்-அப் உதவி எண் 99526-17171 என்கிற எண்ணில் நோயாளிகள், அவர்களுடைய மெடிக்கல் ரிப்போர்ட், புகைப்படம் அல்லது மார்பக புற்றுநோயிக்கான சிகிச்சையில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டு பதில் பெறலாம்.