நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, யானைகள் வழித்தடப் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 400 குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தங்களின் குடியிருப்புகள் போய்விடுமோ என்ற பீதியில் ஒருசிலர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :- யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 12-ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அடையாளம் கண்டு, அவை எப்போது கட்டப்பட்டது, எதற்காகக் கட்டப்பட்டது, தற்போது அக்கட்டிடங்கடள எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு விபரங்களை வரும் அடுத்த மாதம் 08-ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, யானை வழித்தடங்கள் குறித்த கணக்கெடுப்பு விபரங்களை சமர்ப்பிக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் உதகை வட்டத்தில் உள்ள யானைகள் வழித்தடப் பகுதிகளில் கணக்கெடுப்பு பணி மட்டுமே மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.