தொடர் மழை காரணமாக உதகையில் நிலச்சரிவு : கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

நீலகிரி : உதகையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்துள்ளன.

நீலகிரி : உதகையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்துள்ளன. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கூடலூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்திற்கு மேலாக குளிர் காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடந்த 3 நாட்களாக நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 



இந்த நிலையில், இன்று காலை உதகையில் உள்ள மாரிஸ் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியிருப்புவாசிகளின் கார்கள் இந்த மண்சரிவில் புதையுண்டன. மேலும், இரண்டு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. 



இதனிடையே, நீலகிரியில் அடுத்த இருநாட்களுக்குக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் பயத்துடன் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...