சென்னை: அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயதான சிறுமி வசித்த வந்தார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த சிறுமிக்கு, அவர்களது குடியிருப்பின் லிப்டை இயக்கம் ஊழியர்களுடன் சகஜமாக பேசி வந்தார். இதைப் பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த காவலாளிகள், பிளம்பர்கள் என பலர், சுமார் 7 மாத காலமாக தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை ஆளாக்கி உள்ளனர். குடியிருப்பில் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று, மயக்க ஊசி செலுத்தியும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், செல்ஃபோனில் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய அந்த நபர்கள், கத்தி முனையில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான், சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட, அவரது பெற்றொர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, தனது மகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து தெரிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக அவர்கள் அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கினர்.
300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் அந்தக் குடியிருப்பில் தனியார் நிறுவனங்கள் மூலம், ஒப்பந்த அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனையடுத்து, லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களில் 17 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பது மட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளி என்றுகூட பாராமல் இது போன்ற மனித மிருகங்களின் கொடூர செயல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவர்களை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் அடித்து உதைத்த நிலையில், கைதான 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.