கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் : பொதுமக்கள் சாலைமறியல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி பகுதி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதன் காரணமாக தினம்தோறும் முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறு வரும் யானைகள் சாலையில் நடப்பது அன்றாட நிகழ்வாகும். 



இந்த நிலையில், வழக்கம் போல நேற்று இரவு ஊருக்குள் நுழைந்த யானைகள் இன்று காலை 7 மணியளவில் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பின. 

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மதரசா பள்ளிக்குச் சென்று திரும்பியுள்ளனர். அவர்கள் எதிரே யானை வருவதைக் கண்டு ஓடியுள்ளனர். அதில், மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காட்டு யானை கீழே கிடந்த குழந்தைகள் அருகே வந்த நிலையில், அப்பகுதி மக்கள் யானையை விரட்டியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே, விரைவில் காட்டு யானை ஊருக்குள் நுழைவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக தமிழக – கர்நாடகா இடையே சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...