மழைநீர் வடிகாலை திருத்தி அமைக்கக் கோரி சி.பி.ஐ., (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி சார்பில் மனு

கோவை: 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.

முத்தண்ணன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சென்ற வருடம் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. சாலை மட்டத்தின் அளவை விட உயரமாகவும், குடியிருப்புகளை விட உயரமாகவும் இந்த வடிகால் வாரிய கட்டுமானப் பணிகள் கட்டப்பட்டுள்ளதால், மழைநாட்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக புகாரளித்து வந்தனர். இதேபோல, தற்போது தடாகம் சாலையிலும், மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில், 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரியும், தடாகம் சாலையில் இதேபோல் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலை உடனே திருத்தி அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.



இதுகுறித்து 21-ம் வார்டு முன்னாள் கவுன்சிலர் மற்றும் சி.பி.ஐ., (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) கட்சியின் மாநகர செயலாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில், "சாலை மற்றும் குடியிருப்புகளின் மட்டத்தைவிட உயரமாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் முதியோர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பருவமழை தொடங்கியுள்ளதால் குடியிருப்பு பகுதியில் நீர்தேங்கி டெங்கு நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை உடனடியாக சரிசெய்ய வேண்டியும், இதேபோல, தடாகம் சாலையில் கட்டப்பட்டு வரும் வடிகாலை திருத்தி அமைக்க வேண்டியும் துணை ஆணையாளரிடம் மனு அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்" என்றார்.

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு:




பாதாளத்தில் வீடு; பரிதவிக்கும் எளிய மக்கள் - கிளிக் செய்யவும்

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...