கோவை: கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரின் மகன் சஞ்சய் பிரசாத் (18). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், 2-ம் ஆண்டு உற்பத்தித்துறை படித்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வகுப்பில் சஞ்சய் பிரசாத்திற்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைபார்த்த கணினித்துறையின் பகுதிநேர ஆசிரியர் முருகன் இருவரையும் கண்டித்துள்ளார். அதேபோல இருவரையும் திட்டியதோடு, பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பிற்குள் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால், பெற்றோரை அழைத்து வர பயந்த சஞ்சய் பிரசாத்தினை, ஆசிரியர் கடந்த வாரம் முழுவதும் வகுப்பிற்குள் வர அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சஞ்சய் பிரசாத் திருப்பூரில் உள்ள தனது வீட்டில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, இன்று மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் வைரம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை அளித்து அவர் உத்தரவிட்டார்.

"மாணவர் சஞ்சய் பிரசாத் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்," இவ்வாறு கல்லூரி முதல்வர் வைரம் தெரிவித்தார்.