ஏர்வால்வு உடைப்பால் திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரின் அளவில் சரிவு

கோவை: பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் ஏர்வால்வு உடைப்பால், திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரானது, ஆழியாறு அணைக்குள் பாய்ந்து செல்கிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் ஏர்வால்வு உடைப்பால், திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரானது, ஆழியாறு அணைக்குள் பாய்ந்து செல்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொள்ளாச்சி அருகே உள்ள தூணக்கடவு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு 950 கன தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சர்க்கார்பதியில் மின் உற்பத்திக்கு பிறகு தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. 



இந்நிலையில், ஆழியார் அருகே உள்ள சின்னார்பதி மலை குகையில் அமைக்கப்பட்டுள்ள ஏர் வாழ்வு (காற்று குழாய்) திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் கசிந்து வருகிறது. அங்குள்ள மேல்மட்ட பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பழுதடைந்த பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனிடையே, கசிவு அதிகமாக ஏற்பட்டால் சின்னார்பதி மலைவாழ் குடியிருப்பில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரின் பெரும்பகுதி, ஆழியாறு அணையில் கலக்கின்றது . இந்த ஏர்வால்வு உடைப்பால், அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...