திருப்பூர்: மாத சாந்தா செலுத்தக்கூறி பல லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், டிஸ்க்-அக்ரோ என்கிற நிறுவனம் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருபவர்களிடம், மாத சாந்தா மூலம் பணத்தை சேமித்து 5 வருடங்களில் இரண்டு மடங்காக மாற்றலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளது.
இதை நம்பி ஏமார்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ 1000, ரூ.500, ரூ.300 என பணத்தை செலுத்தினர். 60 - மாதம், 90 - மாதம் முடிவில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய அந்த நிறுவனம், மாதம் ரூ.1000 வீதம் 63 மாதங்கள் செலுத்தினால் முதிர்வு தொகையாக ரூ. 1-லட்சம் தருவதாகவும் கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள், "பணத்தை முதலீடு செய்தவர்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே தங்களது பணத்தை சென்று கேட்டதற்கு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவதாக கூறுகின்றனர். பணத்தை தராமல் காலம் கடத்தி வருகின்றனர். முதிர்வு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.