கோவை: கோவை, நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை: கோவை, நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவையை பொறுத்தவரையில் இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்தது. இதனால், கோவையின் குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் நிரம்பின. மேலும், மாவட்டத்தின் பல்வேறு அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.
தற்போது இரண்டாம் கட்ட தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இன்று காலை கோவையில் கனமழை பெய்தது. இதனால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த பருவ மழையின் போது கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின்படி, மாவட்ட நிர்வாகம் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.