கோவை: கோவை மாவட்டம் போத்தனூரில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

போத்தனுார் சர்ச் ரோட்டில், செயின்ட் ஜோசப் சர்ச் அருகே தொடங்கும் இப்பாலம், செட்டிபாளையம் சாலையில் வெள்ளிங்கிரி காம்ப்ளக்ஸ் அருகே முடிவடைகிறது. 1.1 கி.மீ., நீளம் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலம் ரூ.22 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தினால் போத்தனூர், செட்டிபாளையம், வெள்ளலூர், குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் கேரளா செல்லவும் இச்சாலை பிரதான சாலையாக கருதப்படுவதால் கேரளா செல்லும் வாகன ஒட்டிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல முடியும்.