சென்னை: சாலை விபத்தில் பலியான செய்தியாளர் ஷாலினியின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர் சென்னையிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவரும், இவரது நண்பர்கள் நான்கு பேரும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் வசிக்கும் சக ஊழியரை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களது கார் கொடைரோடு என்ற இடத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஷாலினியின் பிறந்த நாளன்றே அவர் உயிரிழந்தது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரங்கல்
செய்தியாளர் ஷாலினி உயிரிழப்பிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க., தலைவர் தமிழை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஷாலினியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.