கோவையில் விடாத மழையால் வெறிச்சோடிய மனு நீதி நாள்

கோவை: விடாமல் தொடரும் கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நடைபெறும் நாளுக்கு மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை: விடாமல் தொடரும் கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நடைபெறும் நாளுக்கு மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நாள் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் மனு கொடுக்க வருவது வழக்கம். ஆனால், இன்று மழை காரணமாக பெரும்பாலான மக்கள் வரவில்லை இதனால் மனு நீதி நாள் வெறிச்சோடி காணப்பட்டது.



கோவை மாவட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதனால் மனு நீதி நாள் மிகவும் பரபரப்பாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக மக்கள் கூட்டம் வரவில்லை என்பதால் இன்று நடைபெற்ற மனு நீதி நாளினை மீண்டும் இதே வாரத்தில் ஒரு நாள் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...