நீலகிரி: தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (ஜுலை 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்தின் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜுலை 16) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.