கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை நகர கழக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை நகர கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவலகத்திலும், பழைய பேருந்து நிலையத்திலும் கொடியேற்றப்பட்டது. இதற்கு மத்தியில், அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வால்பாறை நகர கழக செயற்குழு மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி வரவேற்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் கழக மாவட்ட நிர்வாகிகளும், வால்பாறை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜானகிராமர், சத்தியவாணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், மொய்தீன், சுதாகர், செல்வம், இந்துமதி, சூர்யபிரபா மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.