பா.ஜ.க.,வுடன் இணைந்தால் ரஜினிக்கு சிவசேனா ஆதரவளிக்கும் : மாநிலத் தலைவர் அறிவிப்பு

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

நீலகிரி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க,வுடன் இணைந்து போட்டியிட்டால், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் சிவசேனா கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ரமேஷ் பாபு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொதுமக்களுக்குக் கந்து வட்டியை கொடுத்து தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலை பொதுமக்களுக்குப் பயன் தரும் சாலையாக இருப்பதால், அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.



வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலை செயல்படுத்தப்போவதாக தெரிவித்திருப்பதை சிவசேனா கட்சி ஆதரிக்கிறது. ரஜினிகாந்த் பா.ஜ.க.,வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் சிவசேனா கட்சியும் அதில் இணையும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...