கோவை: நாட்டில் தோல் கொடையாளர்களுக்குத்தான் மிகப்பெரிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கங்கா மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான மைக்ரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறையின் மருத்துவர் ராஜா சபாபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களுக்காகவே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் அவர்கள் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். உடலில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்கள் ஏற்படுபவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக, இரத்த வங்கிகளைப் போலவே, தோல் வங்கி (Skin Bank) தேவைப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கங்கா மருத்துவமனையில் தோல் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
தோல் தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 15-ம் தேதி 'தேசிய பிளாஸ்டிக் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாராட்டும் விழா கங்கா மருத்துவமனையின் சார்பில் இன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தோல் கொடை பெற்ற ராஜேஸ்வரி பேசுகையில், "தீ விபத்தில் சிக்கியர்வகள் பெரும்பாலும், தான் இறந்துவிடுவோம் என்றே நினைக்கின்றனர். எனது உறவினர்களில் பலர் சிறிது தீக்காயங்களுக்கே உயிரை நீர்த்துள்ளனர். ஏனெனில், தீக்காயங்களுக்கு சிகிச்சை கிடையாது என்ற போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். நான் தோல் வங்கிக் குறித்து தெரிந்து, இங்கு வந்து சிகிச்சைப் பெற்றுக் கொண்டேன். தற்போது, மற்றவர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்," என்றார்.

இதைத் தொடர்ந்து, கங்கா மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான மைக்ரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறையின் தலைவரும், மருத்துவருமான ராஜா சபாபதி பேசியதாவது :- நமது நாட்டில் தற்போது, தோல் கொடையாளிகள்தான் அதிகம் தேவைப்படுகின்றனர். ஆனால், தோல் கொடை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தற்போதும் கூட தோல் கொடை சாத்தியமா..? என்பதே பலருக்கு தெரியாது. கண்களை தானம் செய்வதைப் போன்றுதான் தோல் தானம் செய்வதும். இறந்தவர்களின் உடலில் தோல் தானம் அளிக்கக் குடும்பத்தினர் முன்வந்தால், உடலில் 0.5 மி.மீ அளவு தோல் எடுக்கப்படும். இதுவரை 150 கொடையாளிகளிடம் 3,30,000 செ.மீ தோல் கொடையாகப் பெறப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.