நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்தில், 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன.

இந்நிலையில், நீலகிரியில் நேற்று மாலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், இன்று உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் என்னும் இடத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் காலை நேரம் என்பதாலும் கிறிஸ்துவ ஆலய வழிபாட்டுக்கு சென்ற மக்கள், திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதில், இம்மானுவேல் அகஸ்டின் (18) மரம் விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்டார். தலையில் பலத்த காயமடைந்த இவரை, பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இம்மானுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு அகற்றினர். இதனால், கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் ஆபத்தான நிலையில் மரங்கள் இருப்பதால், அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பிங்கர் போஸ்ட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கூடலூர், உதகை ஆகிய பகுதிகளை தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேரிடர் கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.