கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை 2-வது முறையாக நிரம்பி வழிகிறது.

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, நேற்று மாலை மீண்டும் அதன் மொத்தக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதனால், கோவை மாநகர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் மழை நீடித்ததால், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2-ம் தேதி அதன் கொள்ளளவை எட்டியது. தொடர் மழையினால், 10-ம் தேதி அணையில் இருந்து நீர் நிரம்பி வழிய ஆரம்பித்தது. இதனால், விநாடிக்கு 7 கனஅடி நீர் மதகுகளில் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரும், கொள்ளளவை எட்டியதால் நிரம்பி வழியும் உபரிநீரும் பில்லூர் அணையைச் சென்றடைகிறது.
2-வது முறையாக சிறுவாணி அணை மீண்டும் அதன் கொள்ளளவை கடந்து பாய்ந்து வருகிறது. இதன்மூலம், அடுத்த 6 மாத காலத்திற்கு கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது என்பது உறுதியாகியுள்ளது. இதேபோல, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையினால், சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் 20 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.