அழிந்து வரும் பட்டியலில் இருந்து புலி இனங்கள் மீட்கப்படுமா...?, தமிழகத்தில் புலிகள் காப்பகங்களை விரிவுபடுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களைப் போல, இன்னும் சில புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தினால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வன உயிரின ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களைப் போல, இன்னும் சில புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தினால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வன உயிரின ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். 



இந்தியாவில் 1970-ம் ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 40,000 புலிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின், 1972-ம் ஆண்டு நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது. 



பின்னர், இது தொடர்பாக, அப்போதை பாரத பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்ததில், மனிதன் காடுகளை அழித்தும், வனவிலங்குகளை வேட்டையாடியதில் தான் பல்வேறு வனவிலங்குகளும், புலிகளும் அழிந்து உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் புலிகளும் சேர்க்கப்பட்டது.



இதற்குப் பிறகு தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் காப்பக திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த 1973-ம் ஆண்டு 'பனாமா' என்ற இடத்தில் தான் முதன்முதலாகப் புலிகள் காப்பகம் தொடக்கப்பட்டது. அதன் பின்னரும், புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தேச புலிகளின் எண்ணிக்கை, வெறும் 2,300-க்கும் மேற்பட்ட புலிகள்தான் இருக்கக்கூடும் என கணக்கீடு கூறுகிறது. இவ்வாறு புலிகள் அழிந்து வருவதைக் கண்டு அதிர்ந்து போன அரசாங்கம், புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்களை இணைத்து ஓரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பின் மூலம், புலிகளைப் பாதுகாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு புலிகள் காப்பகத்தை அதிகப்படுத்தப்பட்டது. 



சுமார் 1980-களில் 9,115 சதுர கி.மீ., பரப்பளவைக் கொண்டிருந்த புலிகள் காப்பகங்கள், 13,000 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, இந்தியாவில் 48 புலிகள் காப்பகம் உள்ளது. இந்தப் புலிகள் காப்பகங்களில் புலிகளை மட்டும் பாதுகாக்காமல், அதற்கு உணவான மான், காட்டெருமை, கடாமான் மற்றும் தாவர வகைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதால், தற்போது புலிகளின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. 



இந்தியாவில் அடர்த்தி கொண்ட புலிகள் காப்பகமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் தற்போது களக்காடு முண்டந்துறை, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட 4 புலிகள் காப்பகம் உள்ளது. 



இந்த நிலையில், தமிழகத்தில் புலிகள் காப்பகத்தை மேலும் விரிவுபடுத்தினால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, உலக புலிகள் தினமான ஜுலை 29-ம் தேதியன்று புலிகளை பாதுகாக்கக் காடுகளை அழிக்காமலும், அதன் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் அழிந்து வரும் புலிகளை பாதுகாப்போம் என உறுதி மொழி ஏற்போம்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...