வரும் 17-ம் தேதி கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

வரும் 17-ம் தேதி கரூர் ரயில்நிலையம் - திருச்சி பயணிகள் ரயில் முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்நிலையம் - கரூர் ரயில்நிலையம் ரயிலானது, திருச்சி ரயில்நிலையம்-முத்தரசன்நல்லூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரயில் முத்தரசன்நல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.

ஈரோடு ரயில்நிலையம் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

17-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் ரயில், திருப்பூர்- முத்தரசன்நல்லூர் இடையே 01.40 மணிநேரம் நிறுத்திவைக்கப்படும்.

திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலின் புறப்பாடு நேரம் 01.30 மணிநேரம் தாமதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 01.00 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 02.30 மணிக்கு கிளம்புகிறது.

இதேபோல, லோகூர் - பொம்மிடி நிறுத்தம் அருகே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற இருப்பதால், 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலப்புழா-டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - சேலம் இடையே 01.40 மணிநேரம் நிறுத்தப்படும். இதேபோல, சேலம்- காட்பாடி ரயில்நிலைம் ரயில் 01.20 மணிநேரம் சேலம்-லோகூர் இடையே நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...