கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில், தற்போது 121.42 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளதால் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.69 டி.எம்.சி அதிகரித்துள்ளது. தற்போது அணையின் 79.45 அடியாக நீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 46,613 கன அடியாக உள்ளது.