கோவை: வால்பாறை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.
கோவை: வால்பாறை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
மழை அளவு
வால்பாறை 58 மி.மீட்டர், சின்னகல்லார் 95 மி.மீட்டர், நீராரர் அணை 58 மி.மீட்டர், சோலையார் அணை 60 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
நீராரர் அணை அணையின் நீர் வரத்து 407.99 கன அடியாக உள்ள நிலையில், 393.52 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 6653.70 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதன் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்தது. தற்போது அங்கு 163 அடி வரை நீர் இருப்பு உள்ளது.

அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சேடல் வழியாக 3979.88 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 600 கன அடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று சராசரி அளவாக 22.32 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அம்மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:-
ஊட்டி 8.4 மி.மீ, நடுவட்டம் 32 மி.மீ, கல்லட்டி 2 மி.மீ, கிளன்மார்கன் 41 மி.மீ, குந்தா 6 மி.மீ, அவலாஞ்சி 86 மி.மீ, எமரால்டு 11 மி.மீ, அப்பர் பவானி 73 மி.மீ, குன்னூர் 2 மி.மீ, கேத்தி 3 மி.மீ, கூடலூர் 37 மி.மீ, தேவாலா 78 மி.மீ மழை பதிவாகியுள்ளது.