கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.

கோவையில் பேரிடர் பயிற்சியின் போது நேற்று மாலை மாணவி லோகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை நாதேகவுண்டன் புதூரில் உள்ள மாணவியின் குடும்பத்தினர் வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை மாணவியின் பெற்றோரிடம் அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

பின்னர் அவர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, பயிற்சியாளர் ஆறுமுகம் மீது கொலை வழக்கு பதிய காவல் துறையிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவர் செய்தது தவறான செயல் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.