பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி தோல் கொடையாளிகளுக்கு பாராட்டு விழா

கோவை: தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி கங்கா மருத்துவமனையின் சார்பில் தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை: தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி கங்கா மருத்துவமனையின் சார்பில் தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களுக்காகவே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் அவர்கள் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். உடலில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்கள் ஏற்படுபவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக, இரத்த வங்கிகளைப் போலவே, தோல் வங்கி (Skin Bank) தேவைப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கங்கா மருத்துவமனையில் தோல் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இது குறித்து தீக்காயங்களுக்கான மைக்ரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை மருத்துவர் ராஜா சபாபதி கூறுகையில், " ஒருவர் உயிரிழந்தவரிடத்தில் இருந்து 6 மணிநேரத்தில் தோலை தானமாகப் பெற வேண்டும். மேலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தோல் தானம் செய்யலாம். கண்தானம் செய்யும் ஒவ்வொருவரும், தோல் தானம் செய்யலாம்," என்றார். 

இதுவரை 150-க்கும் மேற்பட்ட தோல் கொடையாளிகள் இருப்பதாகவும், தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான தோல் வங்கியாக கங்கா மருத்துவமனை செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. புதுடெல்லி, மணிப்பால், ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரூ போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தோல்களை அனுப்பப்பட்டுள்ளது. 

தோல் தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 15-ம் தேதி 'தேசிய பிளாஸ்டிக் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாராட்டும் விழா கங்கா மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கங்கா மருத்துவமனையின் அரங்கில் 15-ம் தேதி காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...