மாணவிகளை தகாத வார்த்தைகளில் வசைபாடும் தலைமையாசிரியர் : சுயமரியாதைக்காகப் போராடிய மாணவிகள்

கோவை: கோவையில் தலைமை ஆசிரியை மாற்றக் கோரி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் தலைமை ஆசிரியை மாற்றக் கோரி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை மாநகராட்சியின் கீழ் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களாகவே மாணவிகளின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாக தலைமை ஆசிரியர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளியில் புதிதாக சேர்ந்திருக்கும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'வரவேற்பு விழா'விற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் மாணவிகள் திட்டமிட்டிருந்தனர். 

ஆனால், இதற்கு தலைமையாசிரியர் மல்லிகா மறுப்பு தெரிவித்ததுடன், தனக்கு கட்டுப்படவில்லை எனில், மதிப்பெண்களை குறைத்து விடுவோம் உள்ளிட்ட பல்வேறு மிரட்டல்களையும் விடுத்ததாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பிறந்த நாளுக்காகப் பூ வைத்து வந்த மாணவியை, இழிவான வார்த்தைகளில் திட்டி சக மாணவிகள் முன்னிலையில் தலைமையாசிரியர் மல்லிகா அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால், தலைமையாசிரியர் மீது மாணவிகள் அதிருப்தியில் இருந்தனர்.

மேலும், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு, நாப்கின்களை மாணவிகளே கைகளில் எடுத்து அப்புறப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் மாணவிகள் சந்தித்து வந்துள்ளனர். அதோடு, கட்டணக் கொள்ளை, இரசீதின்றி கட்டணம் பெறுதல், மாணவிகளுக்கு வழங்க வேண்டிய தின்பண்டங்களில் முறைகேடு, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகளும் அந்தப் பள்ளியில் நிலவி வருவது தெரிய வந்துள்ளது.



இது தொடர்பாக மாநகராட்சி கல்வி அதிகாரி (பொறுப்பு) ரவி மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் பானுமதி ஆகியோரை மாணவிகள் நேரில் சந்தித்து பலமுறை இது தொடர்பாக முறையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், பள்ளித் தலைமையின் மெத்தனப் போக்கு மற்றும் மாணவிகளை தகாத வார்த்தைகளில் திட்டுவதைக் கண்டித்தும், தலைமையாசிரியரை உடனே மாற்றக் கோரியும் மாணவிகள் கடந்த 2 நாட்களாகப் பள்ளி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். 

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவிகள் இன்று பள்ளி வளாகத்தின் வெளியே உள்ள கண்ணுசாமி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி கல்வி அதிகாரி (பொறுப்பு) ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமையாசிரியர் மல்லிகாவை உடனடியாக மாற்ற வேண்டும் என மாணவிகள் வலுவான கோரிக்கையை அவர்களிடம் முன்வைத்தனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...