கோவை கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் பயிற்சிக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.



கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கலைமகள் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவதற்கும் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பயிற்சியாளர் பிடித்து தள்ளியதில், 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி, முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்லூரியில் நடந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் :- கோவையில் மாணவி பலியான செய்தியுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளது. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு உயிரை இழந்திருக்கிறோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாகப் பயிற்சி பெற்றவர் இல்லை, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...