கோவை: கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து, அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், பாலசுந்தரம் செட்டியார் சாலை மகளிர் பாலிடெக்னிக் அருகில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளது. இந்த நவீன பொதுக்கழிப்பிடத்தின் பணிகள் முடிவுற்றுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நவீன பொதுக் கழிப்பிடத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் கை கழிவுமிடங்களில் தண்ணீர் வசதிகள், மின் விளக்குகள் சரியாக செய்யப்பட்டுள்ளதையும், நவீன கழிப்பிடத்தின் வளாகத்தில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் ப.காந்திமதி, உதவி ஆணையாளர் கே.ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.