நீலகிரி: நீலகிரியில் வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதி உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மலைப்பிரதேசங்களில் உள்ள யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் 400 தனியார் விடுதிகளை அகற்ற நேற்று உத்தரவு பிறப்பித்தது.
மழைக்காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் 18,000 யானைகள் இடம் பெயர்கின்றன. யானைகள் செல்லும் வழியில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தில் கட்டுமானத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். யானைகள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளதால், அவை ஊருக்குள் புகுந்து மக்களுக்கும், பயிர்களுக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. யானைகள் வழிமாறி ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே, அதன் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானை வழித்தடங்களில் கட்டிடம் கட்டக்கூடாது என நீதிமன்ற தடைவிதித்த பிறகு, 400 புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை இடிக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் நீதிபதிகளிடம் கேட்டதையடுத்து, அவற்றை அகற்ற தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும் போது, "நீதிமன்ற உத்தரவு இன்னும் வரவில்லை. உத்தரவு வந்தால் தான் என்ன விவரம் என தெரிய வரும். உத்தரவு குறித்து எங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அறிக்கை மற்றும் செயல்திட்டத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தினால் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.