சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,000 கன அடியில் இருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,000 கன அடியில் இருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது.
பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பல்வேறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75.36 கன அடியாகவும், நீர் இருப்பு 37.48 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 38,916 கன அடியாக அதிகரிப்பு.