கோவை இருகூர் பிரிவு அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த19 பேருக்கும் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: இருகூர் பிரிவு அருகே ஆமினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 19 பேருக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருகூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் குப்பம் என்ற பகுதியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு முருகன் டிராவல்ஸ் என்ற ஆமினி பேருந்து சென்று கொண்டு இருந்தது.

இந்நிலையில், முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை முந்த முயன்ற பேருந்து போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரு பெண்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டு கேரளாவிற்கு திரும்பி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் உதவியுடன் தூக்கினர்.

இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பைப்பாஸ் சாலையில் போட்டி போட்டு வாகனம் ஓட்டுபவர்களின் அஜாக்கிரதையே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.