கோவை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த விவகாரம் : அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. 

மேலும், வருகின்ற 31-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை அனைத்துக் கட்சிகள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, வருகின்ற 20 முதல் 23-ம் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கோவை மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டம் குறித்து பேசினாலே கைது செய்வோம் என மாநகராட்சி அடக்குமுறையை கடைபிடிக்கிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...