நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வை யாராலும் நெருங்க முடியாது : டி.டி.வி., தினகரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை அ.ம.மு.க., பிடிக்கும் என டி.டி.வி., தினகரன் கூறியிருந்த நிலையில், அ.தி.மு.க.,வை யாராலும் நெருங்கி விட முடியாது என கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை அ.ம.மு.க., பிடிக்கும் என டி.டி.வி., தினகரன் கூறியிருந்த நிலையில், அ.தி.மு.க.,வை யாராலும் நெருங்கி விட முடியாது என கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கல்வித்துறை சார்பில் 'புதுமைபள்ளி விருது' மற்றும் 'கனவு ஆசிரியர் விருது' ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு விருதுகளை அமைச்சர்கள் வழங்கினர். 



இதைத் தொடர்ந்து, இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- பள்ளி கல்வித்துறைக்காக ரூ. 27,000 கோடிக்கு அதிகமான தொகை தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களிடம் மாணவர்களை அடிக்கும்படி சொன்ன காலம் முதலில் இருந்தது. ஆனால், இப்போது ஆசிரியர் வாய் திறந்து சப்தம் போட்டாலே ஆபத்து வரும் காலம். இந்த சிரமங்களுக்கு இடையில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், முதலமைச்சரிடம் பேசி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 120 மாவட்ட கல்வி அலுவலர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் உள்ள குறைகள் குறித்து பிளாக் லெவல் அதிகாரிகள் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் இல்லாத இடங்களில் அவற்றை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் பெற்றோர் இடைவெளி அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது. இந்த இடைவெளியைப் போக்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவாக்கப்பட வேண்டும். மேலும், பல பள்ளிகளில் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய ஆட்கள் இல்லை என்பது தலைமை ஆசிரியர்களின் புகாராக இருக்கின்றது. முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒப்புதல் பெற்று, 3 மாதங்களில் ஜெர்மன் நாட்டில் இருந்து 1,000 வாகனங்களைப் பெற்று பள்ளிக் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார். 

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளிக்கையில், "34 ஆண்டுகளுக்குப் பின்பு கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 25 ஆயிரம் மாணவர்களுக்கு சி.ஏ., படிக்கும் வகையில் 500 பட்டய தணிக்கையாளர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதி் முடிவுகள் வர 4 மாதங்களாகும். அதன் பின்னர், அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். பொது மாறுதலுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 15 நாட்களில் நடத்தப்படும். காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை," என்றார். 

பின்னர், அமைச்சர் வேலுமணியிடம் கோவையில் டி.டி.வி., தினகரன் நடத்திய பொது கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "கோவையில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி., தினகரன் எப்படி ஆட்களைக் கூட்டி வந்தார் என மக்களுக்கும், ஊடகங்களும் தெரியும். ஒரே ஆட்களை அனைத்து கூட்டங்களுக்கும் அழைத்து செல்கின்றார் டிடிவி தினகரன். மேலும், வெளிமாநில ஆட்களை அழைத்து வந்து கூட்டம் காட்டுகின்றார். டி.டி.வி., தினகரன் பெரிய தலைவர் இல்லை. அ.தி.மு.க., வளர்ச்சியில் தினகரனின் பங்கு என்ன..?.

காவிரி நீர் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து தினகரன் பேசவில்லையே. குறுகிய கும்பலை வைத்து அரசியல் செய்கின்றார்," எனக் கூறினார். 

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை அ.ம.மு.க., பிடிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன், "நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை எவராலும் அ.தி.மு.க.,வை நெருங்கிப் பிடிக்க முடியாது' என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...