சர்வதேச முதுகெலும்பு மருத்துவ கூட்டமைப்பின் தலைவராகிறார் கங்கா மருத்துவமனையின் மருத்துவர் ராஜசேகரன்

கோவை: கோவைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கங்கா மருத்துவமனையின் மருத்துவர் ராஜசேகரன், முதுகெலும்பு மருத்துவ கூட்டமைப்பின் சர்வதேச தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஆசிய-பசிபிக் மண்டலத்தில் இருந்து ஒருவர் இந்த பதவியை ஏற்பது இதுவே முதன்முறையாகும்.


கோவை: கோவைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கங்கா மருத்துவமனையின் மருத்துவர் ராஜசேகரன், முதுகெலும்பு மருத்துவ கூட்டமைப்பின் சர்வதேச தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஆசிய-பசிபிக் மண்டலத்தில் இருந்து ஒருவர் இந்த பதவியை ஏற்பது இதுவே முதன்முறையாகும்.

ஏ.ஓ.ஸ்பைன் (AO Spine)

ஏ.ஓ.ஸ்பைன் என்பது உலகளாவிய முதுகெலும்பு மருத்துவர்கள் சங்கமித்திருக்கும் ஒரு கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பில் உலகம் முழுவதிலும் இருந்தும் 8,000-க்கும் மேற்பட்ட முதுகெலும்பு மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

முதுகெலும்பு மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பம், நவீன முறை சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்தால் போன்றவையே இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும். 

இதுமட்டுமன்றி, இந்த மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, கட்டுரைகளை படைத்து முதுகெலும்பு மருத்துவத்தில் அதிநவீன முறை மருத்துவத்தை அறிமுகம் செய்வதும் ஆகும். 

இதுவரை இந்த அமைப்பிற்கு தலைவர்களாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே தலைவர் பதிவை வகித்துள்ளனர். ஆனால், முதன் முறையாக ஆசிய ஒன்றியத்தில் இருந்து ஒருவர் இந்த கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்கிறார்.

முதல் தலைவர்

முதுகு தண்டுவட சிகிச்சைக்குப் பெயர்போன கோவை கங்கா மருத்துவமனையின் மருத்துவர் ராஜசேகரன் இந்த பதவியை ஏற்கிறார். இது கோவை மக்களை பெருமையடையச் செய்ய வைக்கும் மற்றொரு நிகழ்வாகவே அமைந்துள்ளது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த டேன் ரியூ என்ற மருத்துவர் இந்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்து வருகிறார். 



பதவியேற்பு விழா, சுவிச்சர்லாந்த் நாட்டில் உள்ள பேசில் நகரத்தில் நாளை நடைபெறுகிறது. வரும், 2021-ம் ஆண்டு வரை மருத்துவர் ராஜசேகரன் இந்த பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பு ஆண்டு தோறும் 20 மில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவ மற்றும் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளை செய்துவருகிறது. இனி இந்த அனைத்து பணிகளும் இவரின் தலைமையிலேயே நடைபெறும்.

இதுகுறித்து மருத்துவர் ராஜசேகரன் கூறுகையில், "இதுநாள் வரையில் உலகின் சிறந்த மருத்துவர்கள் வகித்த பதவிக்கு நான் தற்போது செல்கிறேன். அவர்கள் இதுநாள் வரை செய்த பணிகளை முறையாக செய்வதே மிகுந்த சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். கடமை தவறாமல் இந்த பணியை திறம்பட செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது." என்றார். 

இளம் முதுகெலும்பு மருத்துவர்கள் படிப்பு மற்றும் தொழில்நுட்ப மருத்துவ அறிவு மட்டும் பெற்றிருக்காமல் சர்வதேச தரத்திலான சிகிச்சை முறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

வருங்கால திட்டங்கள்

அவர் தலைமைப் பொறுப்பில் பங்கேற்ற பின் முதுகெலும்பு மருத்துவத் துறையில் இரண்டு பெரிய மாற்றங்களை செய்ய இருப்பதாகக் கூறுகிறார்.

"முதலில், சர்வதேச அளவில் 'Clinical Practice forums' என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி, முதுகெலும்பு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்கள் மூலம், நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சையளிக்கும் ஒருமித்த மருத்துவத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறேன். அதில், ஒவ்வொரு குறிப்பிட்ட முதுகெலும்பு பிரச்சனைகளுக்கும் அதற்கேற்ப சிகிச்சை முறைகள் அடங்கிய வழிகாட்டி இருக்கும். 

இரண்டாவதாக, தற்போது முதுகெலும்பு அறுவை சிகிச்சை உலக அளவில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மருத்துவர்களுக்கு முறையான பயிற்சியை வழங்க ‘Spine Surgery Diploma Exams’ என்பதை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலம், அறுவை சிகிச்சை முறைகள், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரம் குறித்து மருத்துவர்களுக்கு புரிதல் ஏற்படும்." என்கிறார். 

வகித்த பதவிகள்

தலைவர், எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை துறை, கங்கா மருத்துவமனை.

தலைவர், SICOT

தலைவர், CSRS AP 

தலைவர், CSRS AP

இணை பேராசிரியர், Tamilnadu Dr MGR Medical University

பேராசிரியர், Royal College of Surgeons of England, 2011–12

தலைவர், AOSpine International Research Commission

முன்னாள் தலைவர், Indian Orthopaedic Association

முன்னாள் தலைவர், Association of Spine Surgeons of India

முன்னாள் தலைவர், ISSLS, Canada

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...