உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலக சுற்றுலா தரவரிசை பட்டியலில் நீலகிரி மாவட்டத்திற்கு தனி இடம் உள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா தலங்களில் பல்வேறு சிறப்பம்சங்களை ஏற்பாடுகள் செய்வது வழக்கம். மாவட்டத்தில் நிலவும் இரண்டு கால நிலைக்கேற்ப சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்று, ஏப்ரல்-மே மாத காலத்தில் முதல் சீசனாகவும். மற்றொன்று செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனாகவும் மாவட்டத்தில் நிலவி வருகிறது.



தற்போது மாவட்டத்தில் இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலா ஸ்தல பகுதிகளை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



குறிப்பாக மாவட்டத்தில் அதிகப்படியான சுற்றுலா பயணிகளைக் கவரும் அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக 7,500 தொட்டிகளில் பிரான்ஸ் மேரி கோல்டு, பேன்சி மற்றும் லூப்பின் போன்ற மலர் செடிகள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...