குப்பைகளை தரம் பிரிக்க உதவிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், பாரதி பூங்காவில் சூன்யா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை சிறப்பாக செய்த பொதுமக்கள், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், பாரதி பூங்காவில் சூன்யா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை சிறப்பாக செய்த பொதுமக்கள், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுனன் அவர்கள் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 



இந்நிகழ்ச்சியில், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை சிறப்பாக செய்த 30 பொதுமக்கள், 12 மாநகராட்சி பணியாளர்கள், 9 தன்னார்வ அமைப்புகள், என மொத்தம் 48 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், "தூய்மைப் பணியில் முன்னிலை மாநகரமாக விளங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். அதற்கேற்ப கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை பொதுமக்களும், மாநகராட்சி பணியாளர்களும், தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் சிறப்பாக மேற்கொண்டுவருவது பாராட்டுக்குரியதாகும். 

மாநகராட்சிப் பகுதியில் இதுபோன்ற பணிகளை தொடர்ந்து அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக மாநகராட்சி என்றும் துணையாக இருக்கும்." என்றார்.

பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் சூன்யா திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிக்கும் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் இயந்திரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.



இந்நிகழ்ச்சிகளில், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ராக் அமைப்பு ரவீந்திரன், பாரதி பூங்கா மகளீர் அமைப்பு உறுப்பினர்கள், வார்டு-22 துப்புரவு பணியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...