திருப்பூர்: மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தொற்றுநோய் தடுப்பு முகாம் பயிற்சியினை தொடங்கி வைப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "வரும் ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலனையில் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் உள்ளது. விரைவில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூரில் முதன்முறையாக தாய்ப்பால் வங்கி, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உள்ளிட்டவை ரூ.20.74 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 44 சிடி ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் 11 கேத் லேப் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன." என்றார்.