மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு: துணைத் தலைவராக ஞானசம்பந்தன் நியமனம்

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நிறுவனருமான கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நிறுவனருமான கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து, அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக அருணாச்சலம், கட்சியின் பொருளாளராக சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



மேலும், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது. உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்று உள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...