திருப்பூரில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

நிகழச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் தாமரைக்கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.

இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதனைஅடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

தகவலறிந்த ஊத்துகுளி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...