கோவையில் மழையினால் இடிந்து விழும் வீடுகள் : புறக்கணிக்கும் தீயணைப்புத்துறை

மழையினால் இடிந்து விழும் பழைய மண் வீடுகளில் மீட்புப் பணியை மேற்கொள்ள தீயணைப்பு படையினர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: மழையினால் இடிந்து விழும் பழைய மண் வீடுகளில் மீட்புப் பணியை மேற்கொள்ள தீயணைப்பு படையினர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தந்து.

இதனால், ஆங்காங்கே மரங்களும், மின் கம்பிகளும் முறிந்து விழுந்தன. மேலும், பழைய ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.



இந்த நேரத்தில், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உயிர் பலி இல்லை என்றால் புறக்கணிப்பு செய்வதாகவும், இதனால், ஆபத்தான மீட்புப் பணிகளை அந்தந்த பகுதி மக்களே செய்து வருவதாகவும் தெரிகிறது. 

இது குறித்து ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மோசஸ் என்பவர் கூறுகையில், "இன்று மாலை எங்களது வீட்டருகே உள்ள பழைய ஓட்டு வீடு திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தின் போது அங்கு யாரும் இல்லாததால் உயிர் பாதிப்புகள் ஏற்படவில்லை.

ஆனால் அந்த வீட்டில் கியாஸ் சிலிண்டர் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தன.

தொடர் மழையால், சரிந்த அந்த வீடு மேலும், சாயும் நிலையில் இருந்தது.

எனவே இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு போன் மூலம் அழைத்தோம். 

ஆனால் அவர்கள், "உயிர்பலி ஏதும் இருக்கிறதா?" என கேட்டு, இல்லை என்ற பதில் கிடைத்தவுடன் மீட்பு பணிக்கு வர மறுத்துவிட்டனர்.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களே, ஆபத்தான நிலையில் உள்ள அந்த வீட்டினுள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  இது எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும்."என்றார்.

உயிர் பலி இருந்தால் தான் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற அவசரகாலங்களில், பொதுமக்கள் அழைத்தவுடன் சம்பவ இடங்களுக்கு மீட்புப்படையினரும், தீயணைப்பு படை வீரர்களும் செல்ல வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...