கோவை: சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவை மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக "சிறு குடும்பமே ஓர் அர்த்தமுள்ள எதிர்கால ஆரம்பத்திற்கு உறுதுணை" என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு பேரணி தொடங்கும் என மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் மழையையும் பொருட்படுத்தாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சுமார் 10.30 மணியளவில் வந்து பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பந்தய சாலையில் உள்ள சுகாதார அலுவலகத்தில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கமிஷனர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே பேரணி முடிவுற்றது.