உதகையில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் மற்றும் சேகரிப்பு மையம் திறப்பு

நீலகிரியில் ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி: நீலகிரியில் ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். 



கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் 110-ம் விதியின் கீழ், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் உருவாக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



தமிழகத்தில் 341 ரத்த வங்கிகளும் 519 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 5 ரத்த வங்கிகளும், 3 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. முதன்முறையாக உதகை தலைமை மருத்துவமனையில் 10 ரத்தக் கூறுகள் பிரிப்பு சேமிப்பு மையத்தில் செயல்பட உள்ளது. இந்தக் கூறுகள் பிரிப்பு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் FFP (Fresh Frozen PLaSMa) ஆகிய மூன்றும் ஒரு யூனிட் இரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனித்தனியே சேமிக்கப்பட்டு மூன்று விதமான நோயாளிகளுக்கு செலுத்தி உயிர் காக்க முடியும். 



நீலகிரி மாவட்டத்தில் ஒருவருடத்திற்கு சராசரியாக 2,500 முதல் 3,000 யூனிட் வரை ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...