கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை இந்த மாதத்தில் 2-வது முறையாக நிரம்பி வழிகிறது.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை 2-வது நாளாக நிரம்பி வழிகிறது.

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, நேற்று காலை 10 மணிக்கு அதன் மொத்தக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதனால், கோவை மாநகர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் மழை நீடித்ததால், 2-வது நாளாக சிறுவாணி அணை மீண்டும் அதன் கொள்ளளவை கடந்து பாய்ந்து வருகிறது. இதன்மூலம், அடுத்த 6 மாத காலத்திற்கு கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது என்பது உறுதியாகியுள்ளது. இதேபோல, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையினால், சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் 15 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோடை காலமான ஜுன் மாதத்தில் 300 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. தற்போது, பருவ மழை தொடங்கியுள்ளதால், கூடுதல் மழைப் பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.