நீலகிரி, வால்பாறையின் சுற்றுவட்டாரப் பகுதியின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம்

கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.



கோவை : நீலகிரி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 136 மி.மீ. மழை பெய்துள்ளது. 



நீரார் அணையில் மழையின் அளவு 155 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 1.050.81 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 722.69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையில் 164 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 164.55 (160) அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5,543.87 கன அடியாக உள்ளது. விநாடிக்கு 7,855.32 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேடல் வழியாக 4.389.98 கனஅடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 622.92 கனஅடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் என 2 வழியாக மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது. அணை பாதுகாப்பு கருதி மெயின் ஷட்டர் திறக்கப்பட்டு 679.98 கனஅடி வெளியேற்றப்படுகிறது.



இதேபோல, கேரள மற்றும் கர்நாடக மாநில எல்லையையொட்டி நீலகிரி மாவட்டம் அமைந்திருப்பதால், ஆண்டுதோறும் தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும். எனவே, இந்த ஆண்டும் எதிர்பார்த்ததைவிடத் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகரித்தே உள்ளது. மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரமாக மற்றும் மின் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ள அணைகளின் நீர் இருப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மழையின் நிலவரம் குறித்து தற்போது காணலாம்.

அணைகளின் நீர் இருப்பு : (மொத்த அளவுநீர் இருப்பு)

குந்தா - 89அடி86அடி, 

கெத்தை - 156அடி150 அடி 

எமரால்டு - 184 அடி133 அடி, 

அவலாஞ்சி - 171 அடி146 அடி, 

அப்பர் பவானி - 210அடி147அடி, 

பார்சன்ஸ் வேலி - 58அடி48அடி, 

போர்த்திமந்து - 130அடி115அடி,

 பைக்காரா - 100அடி84அடி, 

முக்கூர்த்தி - 18அடி14அடி, 

சாண்டினல்லா - 49அடி44அடி,

கிளன்மார்கன் - 33அடி28அடி,

மாயார் - 17அடி14அடி

நீலகிரி மாவட்ட மழை அளவு :

உதகை - 17.2 மி.மீ, 

நடுவட்டம் - 58 மி.மீ, 

கல்லட்டி - 18.1 மி.மீ., 

கிளன்மார்கன் - 62 மி.மீ,

குந்தா - 14 மி.மீ.,

கெத்தை - 4 மி.மீ.,

எமரால்டு - 31 மி.மீ., 

அவலாஞ்சி - 100 மி.மீ., 

கின்னக்கொரை - 2 மி.மீ., 

அப்பர் பவானி - 144 மி.மீ., 

குன்னூர் 5 - மி.மீ., 

பர்லியாறு 8 - மி.மீ., 

கேத்தி 8 - மி.மீ., 

கோத்தகிரி - 5 மி.மீ., 

கோடனாடு - 8 மி.மீ., 

கூடலூர் - 78 மி.மீ., 

தேவாலா - 107 மி.மீ., 

மொத்தம் - 669.3 மி.மீ., 

சராசரி - அளவு 39.37 மி.மீ.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...